×

இங்கிலாந்து புதிய உள்துறை செயலாளராக இந்திய வம்சாவளி பெண் வக்கீல் நியமனம்: தாய் தமிழ்நாட்டை சேர்ந்தவர்

லண்டன்: இங்கிலாந்தின் புதிய உள்துறை செயலாளராக இந்திய வம்சாவளி பெண் வக்கீல் சுயெல்லா பிராவர்மேன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தாயார் தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார். இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வு ெசய்யப்பட்டார். முந்தைய அரசில் உள்துறை செயலாளராக இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த ப்ரீத்தி படேல் தனது பதவியே ராஜினாமா ெசய்தார். அந்த இடத்திற்கு புதிய உள்துறை செயலாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வழக்கறிஞர் சுயெல்லா பிராவர்மேனை (42) பிரதமர் லிஸ் டிரஸ் நியமித்துள்ளார். கன்சர்வேடிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சுயெல்லா பிரேவர்மேன், போரிஸ் ஜான்சன் தலைமையிலான அரசில் அட்டர்னி ஜெனரலாக பதவி வகித்து வந்தார். இரண்டு குழந்தைகளின் தாயான இவர், தமிழ்நாட்டை சேர்ந்த தாய் உமா மற்றும் கோவாவை சேர்ந்த தந்தை கிறிஸ்டி பெர்னாண்டஸ் ஆகியோரின் மகள் ஆவார். இவர் புத்த மதத்தை பின்பற்றி வருகிறார். லண்டனில் உள்ள புத்த கோயிலுக்கு தவறாமல் சென்றுவருவார். புத்தரின் வாசகங்கள் அடங்கிய ‘தம்மபத’ நூலின் மீது நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது….

The post இங்கிலாந்து புதிய உள்துறை செயலாளராக இந்திய வம்சாவளி பெண் வக்கீல் நியமனம்: தாய் தமிழ்நாட்டை சேர்ந்தவர் appeared first on Dinakaran.

Tags : UK ,Tamil Nadu ,London ,Suella Braverman ,Nagadakatam ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...